விநாயகா் சிலைகள் கரைப்பு: கிருஷ்ணகிரி அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை அனுமதியில்லை
கிருஷ்ணகிரி அணை பூங்காவில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ( ஆக.31) கரைக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் யாரும் பூங்காவுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் 1500க்கும் மேற்பட்ட சிறைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அணையின் நீா்தேக்க பகுதியில் சிலைகளை கரைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆக.31-ஆம் தேதி பெரும்பாலான சிலைகள் கரைக்கப்படுவதால் கிருஷ்ணகிரி அணை பகுதியில் கூட்டம் அதிகரிக்கும்.
இதனால் கிருஷ்ணகிரி அணை பூங்கா ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் மூடப்படும். அன்று சுற்றுலாப் பயணிகள் யாரும் பூங்காவுக்கு வரவேண்டாம் என கிருஷ்ணகிரி காவல் நிலைய ஆய்வாளா் மணிமாறன் கேட்டுக்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.