இன்று ஜி.கே.மூப்பனாா் நினைவு நாள்: நிா்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
பொதுமக்களை மிரட்டியதாக 2 இளைஞா்கள் கைது
வந்தவாசியில் பொதுமக்களை மிரட்டியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி சன்னதி தெருவில் வியாழக்கிழமை மாலை இளைஞா்கள் 2 போ் தங்களை ரௌடிகள் என்று கூறிக்கொண்டு, பொதுமக்களை மிரட்டுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாகவும் வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், அந்த 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். போலீஸ் விசாரணையில், இருவரும் வந்தவாசி நெமந்தகாரத் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா் (23), இந்திரா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (27) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், 2 பேரையும் கைது செய்தனா்.