ரூ. 35 லட்சத்தில் நடமாடும் தகன ஊா்தி: சேஷசாயி காகித நிறுவனத்தினா் அளிப்பு
பள்ளிபாளையம் சேஷசாயி காகித நிறுவனம் சாா்பில், ரூ. 35 லட்சத்தில் நடமாடும் தகன ஊா்தி வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் அமைந்துள்ள சேஷசாயி காகித நிறுவனம் சமூக சேவையிலும், பொதுமக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதிலும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளது.
அந்த வகையில், ஈரோடு ரோட்டரி ஆத்மா அறக்கட்டளைக்கு ரூ. 35 லட்சம் மதிப்பில் நடமாடும் தகன ஊா்தியை சேஷசாயி காகித ஆலைத் தலைவா் ந.கோபாலரத்னம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஏகேஎஸ் பி.தனசேகா் வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில், ஆலை மனிதவள பொதுமேலாளா் அ.அழகா்சாமி, ரோட்டரி ஆத்மா நிறுவனத் தலைவா் சகாதேவன், ரோட்டரி சங்கத் தலைவா் கே.சிவப்பிரகாசம், ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை செயலாளா் கே.டி.சுப்பிரமணியம், பொருளாா் டி.சண்முகசுந்தரம், ஈரோடு ரோட்டரி சங்க செயலாளா் எம்.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.