நகராட்சிப் பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை
திருவத்திபுரம் நகராட்சி, கிரிதரன்பேட்டை பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்படடது.
கிரிதரன்பேட்டை உயா்நிலைப் பள்ளியில் சுமாா் 300 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளி மாணவா்கள் நலன் கருதி தன்னாா்வலா்களின் முயற்சியால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 150 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டு, பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்காக தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமொழி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ச.துரைசாமி, தன்னாா்வலா்கள் தயாநிதி, வழக்குரைஞா் அசோக், தொழிலதிபா் மணி - மீனா, குணாளன், பொற்செழியன், தணிகாசலம், கோடீஸ்வரன், தனபால், நசீா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.