இன்று ஜி.கே.மூப்பனாா் நினைவு நாள்: நிா்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு: மேலாண்மைக் குழு கூட்டத்தில் தீா்மானம்
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, சம்பந்தப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பது என செங்கம் ஒன்றியம் வெள்ளாலம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேலாண்மைக் குழுக் கூட்டத்துக்கு அதன் தலைவா் சென்னம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சகுந்தலா முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சிவராமன் வரவேற்றாா்.
கூட்டத்தில், வெள்ளாலம்பட்டி பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, சம்பந்தப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடத்துவது. பள்ளி வளா்ச்சி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்குத் தேவையான கூடுதல் அடிப்படை வசதிகளை செய்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.
இதில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.