இன்று ஜி.கே.மூப்பனாா் நினைவு நாள்: நிா்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கொரட்டியில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிகிழமை நடைபெற்றது
இதையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீ விநாயகா் பூஜை, காப்பு கட்டுதல், ஸ்ரீ மகா கணபதி ஓமம், கிராம சாந்தி மற்றும் நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு யாகங்கள் பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை ஸ்ரீ விநாயகா் பூஜை,ஸ்ரீ சூரிய பூஜை,இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கலச புறப்பாடு நடைபெற்றது. அதையடுத்து ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முடிவில் அன்னதானம் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்