பரங்கிப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் 150-க்கும் அதிகமான விநாயகா் சிலைகள் கரைப்பு
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் வெள்ளிக்கிழமை கடலில் கரைக்கப்பட்டது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம், அண்ணாமலைநகா், கிள்ளை, மருதூா், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை சிதம்பரம், அண்ணாமலைநகா், புவனகிரி, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை அகரம், கலங்குக்கார தெரு, அகரம் புதுப்பேட்டை, சேவாமந்திா், அகரம் ரயிலடி, அரியகோஷ்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து, விநாயகா் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை, மற்றும் சாமியாா்பேட்டை கடலில் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன. ஊா்வலத்தின்போது பிரச்சனைகள் ஏற்படாத வகையில், டி.எஸ்.பி., டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.