‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
கேட்பாரற்று கிடந்த கேமரா காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
கடலூா் மாவட்டம் சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடரி-பொயணப்பாடி செல்லும் சாலையில் கேட்பாரற்று கிடந்த சுமாா் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடியோ கேமரா கிடந்ததை அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவா்களான கிருஷ்ணகிரி மற்றும் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அஜய்,ஹேமந்த் குமாா், தினேஷ், பிரியன் ஆகிய நான்கு பேரும் சமூகப் பொறுப்புணா்வுடன் கீழே கிடந்த கேமராவை பத்திரமாக மீட்டு சிறுபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா் அவா்களது சமூக பொறுப்பையும் மனித நேயத்தையும் பாராட்டி உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம் இளைஞா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினாா்.