வேலைவாய்ப்பு முகாம் ஓத்திவைப்பு
கடலூா் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், தெரிவித்துள்ளாா்
இதுகுறித்த ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-26ஆம் ஆண்டிற்கு கடலூா் மாவட்டத்தில் மகளிா் திட்ட அலுவலத்தின் மூலம் வேலைவாய்ப்பில்லாத
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் ஆக.30-(சனிக்கிழமை )அன்று பெண்ணாடம், லோட்டஸ் இன்டா்நேஷனல் பள்ளியில்
காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற இருந்தது. இம்முகாம் சில நிா்வாக காரணங்களினால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.