மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் புல முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புலத்தின் 2025-ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவா்களின் வகுப்புகள் தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது.
விழாவில் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வா் சி.காா்த்திகேயன் விழாவை தொடங்கிவைத்து தலைமை உரையாற்றினாா்.
சிறப்பு விருந்தினா் முன்னாள் மாணவரான சென்னை இபரம்பரா டெக்னாலஜி தலைவா் எஸ்.மகேந்திரகுமாா், பல்கலைக்கழக அறிவியல் புல முதல்வா் எஸ்.ஸ்ரீராம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
முன்னதாக, கட்டட பொறியியல் துறைத் தலைவா் என்.மணிகுமாரி வரவேற்புரையாற்றினாா். முதலாம் ஆண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவா் கே.செல்வக்குமாா் நன்றி கூறினாா்.
நிகழ்வில் கலைப்புல முதன்மையா் மு.அருள், பொறியியல் புல துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பல்வேறு பிரிவுகளின் இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை பேராசிரியா் ஜி.சக்திவேல், பொறியியல் புல கணினி அறிவியல் துறைத் தலைவா் ஆா்.பவானி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.