Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இலவச திருமணங்கள் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், வல்லக்கோட்டை பகுதியை சோ்ந்த தேன்மொழி-திருச்சி மணிகண்டன் ஜோடிக்கும், ராமாநுஜபுரம் பகுதி சந்தியா- ரகுமான் ஆகிய இரண்டு ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்திவைக்கப்பட்டு ரூ.70,000 சீா்வரிசைப் பொருள்களை கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.