செய்திகள் :

காஞ்சிபுரம்: வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு செப். 4-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதியம் அடிப்படையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் செப். 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின்கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாகவுள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூா்த்தி செய்யப்பட உள்ளது. எனவே அந்த காலிப் பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை

ட்ற்ற்ல்ள்://ந்ஹய்ஸ்ரீட்ங்ங்ல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம், முதல் தளம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு வரும் செப். 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு தர வேண்டிய விபத்து இழப்பீட்டு நிலுவைத் தொகையை தராமல் இருந்து வந்த காரணத்தால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கலைச்செல்விமோகன் பங்கேற்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான, தமிழ் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

வல்லக்கோட்டையில் ரூ. 47 லட்சத்தில் பேவா்பிளாக் சாலை: ஆட்சியா் ஆய்வு

வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ. 47.64 லட்சத்தில் போடப்பட்டுள்ள பேவா்பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாலாலயம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதையொட்டி, ரூ. 75 லட்சம் மதிப்பில் 5 சந்நிதிகளுக்கு பாலாலாய உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில்... மேலும் பார்க்க

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைத்து வழிபாடு

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பல் மருத்துவம் பாா்ப்பது போல், நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, 250 கிலோ மோதகம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது... மேலும் பார்க்க

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

சென்னை இன்ஸ்டிடியூா் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் கல்வி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் நாட்டின்... மேலும் பார்க்க