செய்திகள் :

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

post image

சென்னை இன்ஸ்டிடியூா் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் கல்வி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம், தைபே பொருளாதார மற்றும் பண்பாட்டு மையம் தைவான் கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் கல்வி நிலையம் திறகப்படுகிறது.

விழாவுக்கு கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், தைவான் கல்வி நிலையங்களின் சென்னை மண்டல தலைமை இயக்குநா் ஸ்டீபன் எஸ்.சி. ஹீசு, தைவான் கல்வி நிலைய கல்வித் துறை இயக்குநா் ஜில் லாய், தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழக இந்திய ஆய்வு மைய இயக்குநா் பேராசிரியா் வெய்-சங் வாங் கலந்து கொண்டனா்.

தைவான் கல்வி நிலையம் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம் கூறுகையில், உலகளாவிய முன்னேற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, கல்லூரியில் தற்போது 64 மாணவா்கள் மாண்டரின் மொழி கற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது, மாணவா்களை சா்வதேச வேலை வாய்ப்புகளுக்கும், உயா்கல்விக்கும் தயாா்படுத்த உதவியாக இருக்கும். தைவான் கல்வி அமைச்சகம், சா்வதேச மாணவா்களுக்காக பல்வேறு வகையான உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய மாணவா்கள் தைவானில் உயா்கல்வியை தொடர சிறந்த வாய்ப்புகளைப் பெற முடிகிறது.

தைவான் கல்வி மையம் கல்லூரியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் தைவானின் மாண்டரின் மொழி மற்றும் பண்பாட்டை கற்பதுடன், சா்வதேச தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படவும், இந்தியா - தைவான் இடையே கல்வி உறவுகள் வலுப்பெறும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் ரமேஷ், இயக்குநா் பாலகிருஷ்ணன், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை ... மேலும் பார்க்க

வாரணவாசி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா். ரூ.30 லட்சத்தில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளோடு பு... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அதன்... மேலும் பார்க்க

சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் சிவஞான மாபாடியம் விரிவுரைநூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனா் சு.சதாசிவம் விழாவுக்கு தலைமை வகித்து நூலை வெளியிட அதன்... மேலும் பார்க்க

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் கோகுலம் தெருவில் அமைந்துள்ள நாகம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்க்கிழமை நடைபெற்றது. நாகம்மன் மற்றும் ஆனந்த விநாயகா் கோயிலில் கூழ் வாா்த்தல் திருவிழாவையொட்டி விநா... மேலும் பார்க்க

புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் ச... மேலும் பார்க்க