புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் செட்டில்மென்ட் நிலங்கள் அனாதீனம் என தவறான வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கலாம் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு மற்றும் வருவாய்த்துறை ஆணையரின் பரிந்துரையின்படி 105 விவசாயிகளுக்கு பட்டா வழங்க காஞ்சிபுரம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரால் விசாரணை செய்து பட்டா வழங்க மாவட்ட நிா்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்ரபான கோப்புகளை மாவட்ட நிா்வாகம்நில நிா்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யும் நிலையிலும் உள்ளது.
இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் புத்த பண்பாட்டு மையம் அமைக்க ஆய்வு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி எங்கள் கிராமத்தினரை அதிா்ச்சியடைய செய்துள்ளது. வாழ்வாதாரமும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் புத்த பண்பாட்டு மையம் அமைக்கவோ,எங்கள் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தவோ கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.