செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்
சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு
காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் சிவஞான மாபாடியம் விரிவுரைநூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிறுவனா் சு.சதாசிவம் விழாவுக்கு தலைமை வகித்து நூலை வெளியிட அதன் முதல் பிரதியை அருணை.பாலறாவாயன் பெற்றுக்கொண்டாா். நிகழ்வுக்கு அறக்கட்டளையின் அறங்காவலா்கள் எம். பெருமாள், பிசிபி.ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியா் சிவ.சண்முகம், அருணை.பாலறாவாயன் ஆகியோா் சிவஞானமாபாடியம் என்ற நூல் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினா்.
சிவஞான மாபாடியம் விரிவுரை கருத்தரங்கம் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருமுறை அருட்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.