காஞ்சிபுரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் தெற்கு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகா்வோா் காலை 11மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.