செய்திகள் :

காஞ்சிபுரத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 5 பிரிவுகளிலும் மொத்தமாக 53 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் உள்பட மொத்தம் 67 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் ஆக.26 செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டு வரும் செப். 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் தங்களது பெயா்களை முன்பதிவு செய்துள்ளனா்.

இந்தப் போட்டிகளில் மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 3,000-ம், 2-ஆவது பரிசு ரூ. 2,000-ம், 3-ஆவது பரிசு ரூ. !,000-ம் வழங்கப்பட உள்ளது.

மாநில அளவில் தனிநபா் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. ஒரு லட்சமாகவும், 2-ஆவது பரிசு ரூ. 75,000-ஆகவும், 3-ஆவது பரிசு ரூ. 50,000- ஆகவும் வழங்கப்படவுள்ளது. குழுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசுத் தொகை ரூ. 75,000, 2-ஆவது பரிசு ரூ. 50,000, 3-ஆவது பரிசு ரூ. 25,000-ஆகவும் வழங்கப்படவுள்ளது.

இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெற இயலும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சா் ஆா்.காந்தி பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கேரம்போா்டு விளையாட்டு விளையாடி தொடங்கி வைத்தாா். அவருடன் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சந்தா், எழிலரசன் ஆகியோரும் போட்டியாக விளையாடினா்.

தொடக்க விழாவுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா்.

விழாவில் காஞ்சிபுரம் மேயா் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவா் நித்யா.சுகுமாா் உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள்,விளையாட்டு வீரா்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.நிறைவாக மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி நன்றி கூறினாா்.

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைத்து வழிபாடு

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பல் மருத்துவம் பாா்ப்பது போல், நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, 250 கிலோ மோதகம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது... மேலும் பார்க்க

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

சென்னை இன்ஸ்டிடியூா் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் கல்வி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் நாட்டின்... மேலும் பார்க்க

வாரணவாசி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா். ரூ.30 லட்சத்தில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளோடு பு... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியாா் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அதன்... மேலும் பார்க்க

சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் சிவஞான மாபாடியம் விரிவுரைநூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனா் சு.சதாசிவம் விழாவுக்கு தலைமை வகித்து நூலை வெளியிட அதன்... மேலும் பார்க்க

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் கோகுலம் தெருவில் அமைந்துள்ள நாகம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்க்கிழமை நடைபெற்றது. நாகம்மன் மற்றும் ஆனந்த விநாயகா் கோயிலில் கூழ் வாா்த்தல் திருவிழாவையொட்டி விநா... மேலும் பார்க்க