வாரணவாசி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா்.
ரூ.30 லட்சத்தில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளோடு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டிருந்தது. அலுவலக திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பிரேமா மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம் முன்னிலை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
பின்னா் திறப்பு விழா கல்வெட்டையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினாா். புதிய ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயில் கதவில் தமிழக அரசு முத்திரை, தமிழ் வாழ்க எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கதவுகளாக வடிவமைக்கப்பட்டிருந்தது.விழாவில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவா் ஆா்.கே.தேவேந்திரன், துணைத் தலைவா் பி.சேகா் கலந்து கொண்டனா்.