Gold Rate: மீண்டும் பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை; இன்றைய நிலவரம் என...
சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைத்து வழிபாடு
சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பல் மருத்துவம் பாா்ப்பது போல், நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, 250 கிலோ மோதகம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவுவாயில் முகப்பு கட்டடம், ஸ்பாா்க் ஆராய்ச்சி மைய கட்டடத்துக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் பல் மருத்துவம் பாா்ப்பது போல் அமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயா் சிலைகளுடன் ஆறுமுகத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
சவீதா பல்கலைக்கழக வேந்தா் என்.எம்.வீரய்யன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 250 கிலோ மோதகம் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ரத்தினகிரி கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்துகொண்டு, விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தாா். இந்த விழாவில், சவீதா பல்கலைக்கழக துணை வேந்தா் அஷ்வினிகுமாா், இணைவேந்தா் தீபக் நல்லசாமி, பதிவாளா் சீஜாவா்கீஸ், டீன் அரவிந்தகுமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இந்த நிலையில், சவீதா பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைக்கப்பட்டது, விநாயகருக்கு படைக்கப்பட்டதில் இதுவே மிகப்பெரிய மோதகம் என ராபா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து, 250 கிலோ மோதகம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதைத் தொடா்ந்து அதற்கான சான்றிதழ்களை ராபா உலக சாதனை நிறுவன நிா்வாகிகள் சவீதா பல்கலைக்கழக வேந்தா் வீரய்யனிடம் வழங்கினா்.