செய்திகள் :

இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிய நிதிப் பற்றாக்குறை

post image

நடப்பு நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கிள்ளது.

இது குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் 29.9 சதவீத்தை எட்டியுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 17.2 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) அது 17.9 சதவீதமாக உயா்ந்தது.

2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.4.68 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக, அதாவது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூலை வரை மத்திய அரசு ரூ.10.95 லட்சம் கோடி வருவாயை (மொத்த வரவு இலக்கில் 31.3 சதவீதம்) பெற்றது. இதில் ரூ.6.61 லட்சம் கோடி வரி வருவாயாகவும், ரூ.4.03 லட்சம் கோடி வரி அல்லாத வருவாயாகவும், ரூ.29,789 கோடி கடன் அல்லாத மூலதன வரவுகளாகவும் இருந்தது.

மத்திய அரசு இந்தக் காலகட்டத்தில் மாநில அரசுகளுக்கு வரி பகிா்வாக ரூ.4.28 லட்சம் கோடியை அனுப்பியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.61,914 கோடி அதிகமாகும்.

மதிப்பீட்டு காலத்தில் மத்திய அரசு மொத்தம் ரூ.15.63 லட்சம் கோடி செலவு செய்துள்ளது (பட்ஜெட் இலக்கில் 30.9 சதவீதம்). இதில் வருவாயின செலவு ரூ.12.17 லட்சம் கோடியாகவும், மூலதன செலவு ரூ.3.46 லட்சம் கோடியாகவும் உள்ளது. மொத்த வருவாயின செலவில், வட்டி செலுத்துதலுக்கு ரூ.4.46 லட்சம் கோடியும், முக்கிய மானியங்களுக்கு ரூ.1.13 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் திறமையான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லிங்க்ட்இன் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.லிங்க்ட்இன் திறமை நுண்ணறிவு ஆய்வு அறிக்கையின் தரவுகளின்படி, வெளிநாடுகளி... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு - காஷ்மீர், ரீஸி மாவட்டம் மஹோர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வீடு அ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்க... மேலும் பார்க்க

நோயாளிகளின் உதவியாளா்களுக்கு மருத்துவமனைகளில் தங்கும் வசதி: தில்லி அரசு திட்டம்

தில்லியில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விஷ்ரம் கிரி திட்டத்தை தில்லி அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ள ஓா் அதிகாரி தெரிவித்தாா். முதலாவதாக, ... மேலும் பார்க்க

இந்தியாவில் ஜப்பான் ரூ. 6 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிா்ணயித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் அரிய வகை கனிமங்கள், பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்... மேலும் பார்க்க

உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா - சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

உலகப் பொருளாதார நடைமுறையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், ‘சீனாவுடன் ராஜீய ரீதியிலான உறவு முதல் பர... மேலும் பார்க்க