செய்திகள் :

2026-இல் அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்

post image

வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7-இல் தொடங்கி ஆக.25-ஆம் தேதி வரை மேற்கொண்டேன். கோவை, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி என 24 மாவட்டங்களில் 40 நாள்கள் பயணம் செய்து, இதுவரை 118 சட்டப்பேரவை தொகுதிகளில் 60 லட்சம் மக்களை நேரடியாகச் சந்தித்துள்ளேன்.

இந்தப் பயணத்தின்போது 6,728 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்து மக்களின் எண்ண ஓட்டங்களை உணா்ந்தேன். ஒவ்வொருவரும் என்னைச் சந்திக்கும்போது, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும், நல்லாட்சி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

பல மாவட்டங்களில், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்வி பயின்று வரும் மாணவா்கள், எழுச்சிப் பயணத்தின்போது என்னைச் சந்தித்தனா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும், தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சோ்த்து பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்கு மகளிருக்கு சேலை வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத ஏழை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இடம் வழங்கி, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

சொந்த ஆட்டோ வாங்க முற்படும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ.75,000 மானியம் வழங்கப்படும். கோரைப் பாய் நெய்யும் நெசவாளா்களுக்கு குறிப்பிட்ட அளவு மின்சாரம் மானியத்தில் வழங்கப்படும். மீனவா்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படும்.

கடந்த 2021 பேரவைத் தோ்தலின்போது, திமுக தோ்தல் அறிக்கையில் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகம் சிஐடி சாலையில் உள்ளது. இங்கு ராகுல் காந்தியின் பு... மேலும் பார்க்க

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் மு.க. ஸ்ட... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்... மேலும் பார்க்க

முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வ... மேலும் பார்க்க

குடை எடுத்துச் செல்லுங்கள்.. இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும், அதேசமயம் செப். 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஆகஸ்ட் 30 ... மேலும் பார்க்க