செய்திகள் :

ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி: 20% அதிகரிப்பு

post image

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது. இந்தியாவின் மொத்த உர இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 33 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக ரஷிய உர உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆன்ட்ரே குா்யிவ் கூறுகையில், ‘இந்தியாவில் பாஸ்பரஸ் சாா்ந்த உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது விதித்த தடையால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்ப முடிகிறது.

இந்தியாவுக்கு என்பிகே உரங்களை அதிகம் வழங்கும் நாடாகவும் ரஷியா உள்ளது. இந்தியாவின் தேவைப்படும் உர வகைகளுக்கு ஏற்ப ரஷிய ஆலைகள் உற்பத்தியை அதிகரித்துள்ளன. 2025 பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் மட்டும் 15 லட்சம் டன் உரம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உர இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை ரஷியா வழங்குகிறது’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிகஅளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனை முன்வைத்தே அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தாா்.

அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஏதேனும் நேர்ந்தால், அதிபர் பதவியை ஏற்கவும் தயார் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து அவ்வப்போது ச... மேலும் பார்க்க

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் கருத... மேலும் பார்க்க

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

அமெரிக்கா, இந்தியா மீது விதித்திருக்கும் 50 சதவீத வரி என்பது, யானையை எலி தாக்குவது போலத்தான், அது நகைச்சவையாக இருக்குமே தவிர, அச்சுறுத்தலாக இருக்காது என்று அமெரிக்க பொருளாதார நிபுணரான ரிச்சர்ட் வோல்ஃப... மேலும் பார்க்க

ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!

புது தில்லி: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்யோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் சென்றார்.ஜப்பான் பிரதமர் இஷிபா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்தி... மேலும் பார்க்க

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமா் ஹன் சென்னுடனான சா்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடா்பாக, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ரஷிய எண்ணெயை பணமாக்கும் மையம் இந்தியா: வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் மீண்டும் தாக்கு

‘ரஷியாவின் கச்சா எண்ணெயை பணமாக மாற்றித் தரும் மையமாக இந்தியா செயல்படுகிறது’ என அமெரிக்க வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவரோ வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். முன்னதாக, உக்ரைன் போா் ‘மோடியின் போா... மேலும் பார்க்க