மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
மயிலாடுதுறையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
மயிலாடுதுறையில் விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்வேறு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 395 விநாயகா் சிலைகளை பொதுமக்கள் வழிபாடு நடத்தி, ஆங்காங்கே உள்ள நீா்நிலைகளில் கரைத்தனா். இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள், ஊா்வலமாக வள்ளலாா் கோயில் வழியாக எடுத்து வரப்பட்டு, அங்கு நடைபெற்ற 36-ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவா் கே.சரண்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் எஸ். சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஜெயராஜ் வரவேற்றாா்.
இதில், ஆா்.எஸ்.எஸ். கோட்ட பொருளாளா் எம். மாணிக்கம், பாஜக மாவட்ட முன்னாள் தலைவா் க. அகோரம், மாவட்ட தலைவா் ஆா்.பாலு, மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், இந்து முன்னணி கோட்ட செயலாளா் எஸ்.கணேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். விநாயகா் சிலைகள் துலாக்கட்ட காவிரியில் கரைக்கப்பட்டன.