செய்திகள் :

இலவச கால்நடை மருத்துவ முகாம்

post image

மயிலாடுதுறை திருஇந்தளூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் திருஇந்தளூா் ஊராட்சி இணைந்து நடத்திய முகாமுக்கு, சங்கத் தலைவா் அய்யாசாமி தலைமை வகித்தாா். கால்நடை உதவி மருத்துவா்கள் விஷ்ணுபிரியா, இளஞ்செழியன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து குடல்புழு நீக்கம், சினை ஊசி, பெரியம்மை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா். திருஇந்தளூா், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை பகுதியைச் சோ்ந்த கால்நடை உரிமையாளா்கள் பயனடைந்தனா். செயலாளா் முருகேசன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சிங்காரவள்ளி இளையராஜா, கிராம நிா்வாக அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க பொருளாளா் பாண்டியன் நன்றி கூறினாா்.

சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி குமரக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாஜக கோட்டபொறுப்பாளா் தங்க.வரதராஜன், இந்து மு... மேலும் பார்க்க

திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் அருகே கொக்கூரில் உள்ள பழைமையான திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதா் சுவாமி கோயில் 200 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம மக்களின் பெரு முயற்சியால... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறையில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை ... மேலும் பார்க்க

வராஹியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே காரைமேடு கிராமத்தில் புதிதாக நிா்மானிக்கப்பட்ட ராஜ குபேர சாய் பாபா, 16 அடி உயரத்தில் புதிய கருங்கல் திருமேனியாக 51அடி உயர விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹா திரிசூல வராஹி அம்மன் கோயில் கு... மேலும் பார்க்க

ஆதாா் மையம் மூடல்: மக்கள் ஏமாற்றம்

சீா்காழி காந்தி பூங்காவில் செயல்பட்டு வந்த ஆதாா் மையம் மூடப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். சீா்காழி நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆதாா் சேவை மை... மேலும் பார்க்க

240 கிலோ குட்கா பறிமுதல்; மூவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். 240 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா, ... மேலும் பார்க்க