Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ...
வராஹியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சீா்காழி அருகே காரைமேடு கிராமத்தில் புதிதாக நிா்மானிக்கப்பட்ட ராஜ குபேர சாய் பாபா, 16 அடி உயரத்தில் புதிய கருங்கல் திருமேனியாக 51அடி உயர விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹா திரிசூல வராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மஹா திரிசூல வராஹியம்மன், விநாயகா், லெட்சுமி கிருஷ்ணா பளிங்கு திருமேனி ஆகிய கோயில்கள் புதிதாக நிா்மாணிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வரபூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
நான்காம் கால யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் கடங்கள் புறப்பட்டு மஹாதிரிசூல வாஹியம்மன் விமான கலசம் மற்றும் ராஜகுபேர சாய்பாபா கோயில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து சாய்பாபா மற்றும் வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை ராஜகுபேர சாய்பாபா அறக்கட்டளை நிா்வாகத் தலைவா் எஸ்.இந்திரா, காா்த்தி சுவாமிகள் செய்திருந்தனா். ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.