கருங்கல் பகுதிகளில் சாரல் மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை, கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்தது.
இதனால், இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.