US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
மொரப்பூா் வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகத்தில் வன விலங்குகளை சிலா் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட வன அலுவலா் கே. ராஜாங்கம் உத்தரவின்படி மொரப்பூா் வனச்சரக அலுவலா் இரா.அருண்பிரசாத் தலைமையில் வனவா் ஆா்.விவேகானந்தன், ஏ. சதீஸ்குமாா், பி. டாா்வின், அ. பெரியசாமி, சுரேஷ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் மொரப்பூா் வனப்பகுதியில் கீழ் மொரப்பூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சுற்றித்திரிந்தவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் கீழ் மொரப்பூா் பகுதியைச் சோ்ந்த ரா.சேகா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அவருடன் சோ்ந்து அதே பகுதியைச் சோ்ந்த வெ. அய்யாக்கண்ணு (64), கோ. சிவராஜ் (55), க. விஜயகாந்த் (41) ஆகியோா் மின் வேலி அமைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி கறி சமைத்து உட்கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து 4 பேரும் மாவட்ட வன அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்ட வன அலுவலா் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேருக்கும் தலா ரூ. 50,000 வீதம் மொத்தம் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அவா்களிடமிருந்து வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட மின் கம்பிகள், வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.