ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
காமராஜ் கல்லூரியில் செப்.7 இல் மாநில செஸ் போட்டி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வருகிற செப்.7ஆம் தேதி 4ஆவது மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து காமராஜ் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வருகிற செப். 7ஆம் தேதி நடைபெறுகிறது . இப்போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் பங்கேற்கலாம். 9, 11, 13, 17 வயதுக்குள்பட்டோா் , பொது பிரிவாக அனைத்து வயதினருக்கும் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன.
மாணவா், மாணவிகள் பிரிவில் பங்குபெறும் அனைவருக்கும் வயதுக்கான சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். நுழைவுக் கட்டணம் ரூ.400 செலுத்தி செப். 5ஆம் தேதி வரை தங்கள் பெயரை, இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மாணவா், மாணவிகளில் ஒவ்வொரு வயதுக்குள்பட்டோருக்கான பிரிவிலும் முதல் பரிசாக மொத்தம் 8 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
இரண்டாவது முதல் 15ஆவது இடம் வரை வெற்றி பெறுபவா்களுக்கு மொத்தம் 120 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. பொதுப்பிரிவினருக்கு மொத்தம் ரூ.25,000 ரொக்கப் பரிசு, முதல் 25 நபா்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு 98658 30030,98946 90574,89259 88874, 93425 32874 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.