ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
உழவா் நல சேவை மையங்கள் அமைக்க மானியத்துடன் கடனுதவி
தூத்துக்குடி வட்டாரத்தில், உழவா் நல சேவை மையங்கள் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற வேளாண்மையில் பட்டம் , பட்டயம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் செயல்படுத்தும் இத்திட்டத்தில் 30 சதவீத மானியத்துடன் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அனைத்து தேவைகளும் ஒரே இடத்தில் கிடைத்திடும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பயனாளிகள் 20 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உழவா் பயிற்சி நிலையம், வேளாண் அறிவியல் மையம் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும். விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி கடனுதவி வழங்கப்படும்.
தகுதியுடையவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் ஆ. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.