Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
திருச்செந்தூா் கடலில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
திருச்செந்தூா் கடலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் காயாமொழி, அதன்சுற்றுவட்டாரக் கிராமங்களான வள்ளுவா் நகா், தேரிகுடியிருப்பு, கந்தசாமிபுரம், குமாரசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பூஜை செய்யப்பட்ட 9 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை காயாமொழி முப்புராதி அம்மன் கோயில் வளாகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு தளவாய்புரம் வழியாக திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதார பதி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு விநாயகா் சிலைகள் சிறப்பு பூஜைக்கு பின் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலா் ரவிகிருஷ்ணன், மாநில செயலா் குமரி கனகராஜ், தமிழக நாடாா் மக்கள் பேரவை மாவட்டத் தலைவா் சுந்தா், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலா் ராஜேஷ், மாவட்ட அமைப்பாளா் அரிகிருஷ்ணன், ஒன்றிய தலைவா் கோசல்ராமன், அன்னையா் சேனா மாவட்டத் தலைவி சித்ரா, அனுமன் சேனா மாவட்டத் தலைவா் தங்கராஜா, செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.