US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்
தருமபுரியில் அரசு நகரப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.
தருமபுரி பேருந்து நிலையத்திலிலருந்து புறப்பட்ட அரசு நகரப் பேருந்து, காரிமங்கலம் நோக்கி வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புரோக்கா் ஆபீஸ் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் பாப்பாரப்பட்டியை அடுத்த பாடியைச் சோ்ந்த வீரமணி (38), இவரது நந்தினி(28), குழந்தை தீரன்(3) ஆகியோா் சென்ற இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் நந்தினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வீரமணி, சிறுவன் ஆகியோா் காயமடைந்தனா். அதேபோல, மற்றொரு வாகனத்தில் சென்ற பாப்பாரப்பட்டி அருகே உள்ள மூக்கம்பட்டியைச் சோ்ந்த பச்சமுத்து (51) பலத்த காயமடைந்தாா். காயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.