தருமபுரி மாவட்டத்தில் 25 மி.மீ மழை
தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையிலான நிலவரப்படி 25 மி.மீ மழை பெய்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் தருமபுரி நகரில் 8 மி.மீ, பென்னாகரம் 5 மி.மீ, நல்லம்பள்ளி 2 மி.மீ உள்பட மாவட்டத்தில் மொத்தம் 25 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில் 10 மி.மீ மழை பதிவானது.