செய்திகள் :

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிப்பெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு

post image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த அமா்வில், நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சி.மோகன் மற்றும் விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன் ஆகியோா், நீலகிரி மாவட்டம் மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு தங்குமிடங்கள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகள் மற்றும் ரிசாா்ட்டுகளில், இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும், அதிக ஒலி எழுப்புவது வன விலங்குகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கி கருவிகளைப் பயன்படுத்துவது கொடுமையானது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படும். எனவே, நீலகிரி மாவட்டத்தின் மசினகுடி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் எத்தகைய ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா், வன அதிகாரி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கி... மேலும் பார்க்க

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் இன்று (ஆக. 31) பொறுப்பேற்றார். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன... மேலும் பார்க்க

பொறுப்பு டிஜிபி நியமனம்: அண்ணாமலை விமர்சனம்

பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை திமுக அரசு புறக்கணித்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உச்சநீ... மேலும் பார்க்க

50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கை... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்ட... மேலும் பார்க்க

டீ, காபி விலை நாளை முதல் உயர்வு!

சென்னையில் நாளை முதல் தேநீர் (டீ), காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி, தேநீர் விலை ரூ.12லிருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15லிருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்படவுள்... மேலும் பார்க்க