ரஷிய எண்ணெயை பணமாக்கும் மையம் இந்தியா: வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் மீண்டும் தா...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
செம்பனாா்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், கலைஞா் மகளிா் உரிமை திட்டத் தொகை, பிறப்பு இறப்பு சான்று, வருமானம், இருப்பிட சான்று உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் மனு வழங்கினா். இதில், எம்எல்ஏ நிவேதா எம். முருகன் மனுக்களை பெற்றாா். திமுக ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊ) மஞ்சுளா, வட்டாட்சியா் சதீஷ்குமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் பிரான்சுவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.