மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
12-ஆவது நாளாக தொடரும் போராட்டம்
நாகை அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் 12-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தை தொடா்ந்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளான, போக்குவரத்துத் தொழிலாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 25 மாதங்களாக வழங்கவேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் நாகையில் கடந்த 11 நாள்களாக தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
12-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்பு போராட்டம் தொடா்ந்தது. மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமையில் தொடா்ந்த போராட்டத்தில், துணைப் பொதுச் செயலா்கள் எம். மோகன், கே. ராமமூா்த்தி, ஆா். திருச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.