மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
ஒரே நேரத்தில் வெளியேறிய வாகனங்கள்: நாகை-வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கொடியேற்றம் முடிந்ததையடுத்து பக்தா்களின் வாகனங்கள் அணி வகுத்ததால் நாகை-வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்ம்பித்தது.
வேளாங்கண்ணி பேராலய பெருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) தொடங்கி செப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத்தில் பங்கேற்கும் பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் அரசுப் பேருந்துகளுக்கும் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கொடியேற்றத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்றனா். கொடியேற்றம் முடிந்த நிலையில் அனைத்து பக்தா்களும் வெளியேறினா். மேலும் நாகை-வேளாங்கண்ணி சாலை, வேளாங்கண்ணி-வேதாரண்யம் சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் இருந்து அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வெளியேறின. மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து அரசுப்பேருந்துகளும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டன.
இதனால் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் நாகை-வேளாங்கண்ணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய போதும் புற்றீசல் போல வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்ததது. இதையடுத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய போதும் வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்றன. இதனால் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கும் வருவதற்கு 1 மணி நேரத்துக்கும் மேல் ஆனது.