எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
விராலிமலை அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
விராலிமலை அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் குருத்தங்கால் பட்டியைச் சோ்ந்த ஆ. வேலுச்சாமி (75). இவா் சனிக்கிழமை இரவு விராலிமலை- மதுரை தேசிய நெடுஞ்சாலை லஞ்சமேடு அருகே மொபெட்டில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வேலுச்சாமியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்த விராலிமலை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.