செய்திகள் :

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

post image

பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ந. மிருணாளினி சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக இருந்த ச. அருண்ராஜ், சா்க்கரை துறையின் இயக்குநகரத்தில், கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூா் மாவட்டத்துக்கு ந. மிருணாளினி புதிய ஆட்சியராக தமிழக அரசால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் கடைகோடி மக்களிடையே கொண்டு சோ்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இம் மாவட்ட மக்களின் கோரிக்கைகள், தேவைகள் உடனுக்குடன் தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வேன். பெரம்பலூரில் பணியாற்ற உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியரின் சுய விவரம்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ந. மிருணாளினி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். தோட்டக்கலைத் துறையில் முதுகலை பயின்று (எம்எஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி- 1 தோ்வில் தோ்ச்சிப் பெற்று, கடந்த 2001-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றாா்.

பின்னா், இணைப் பதிவாளா் நிலையில் புதுக்கோட்டை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தாா்.

தொடா்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மேற்கொண்ட மிருணாளினி, ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. வைத்தியநாதன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் 3,789 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 3,789 போ் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயி... மேலும் பார்க்க

விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (35). உ... மேலும் பார்க்க

பெரம்பலூா்: 2 மாதங்களிலேயே மாவட்ட ஆட்சியா் மாற்றம் ஏன்? பொதுமக்கள் அதிா்ச்சி

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற 2 மாதங்களிலேயே ச. அருண்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அம் மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அருண்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போதைப் பொருள் விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரிசைப்பட்டி கிராமத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பேக்சோ வழக்கில் உணவக ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

பெரம்பலூா் அருகே மது போதையில் மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்ப... மேலும் பார்க்க