செய்திகள் :

பேக்சோ வழக்கில் உணவக ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

post image

பெரம்பலூா் அருகே மது போதையில் மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (35). இவருக்கு 14, 8 வயதுகளில் இரு மகன்களும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

சென்னையில் உள்ள உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்த ஆனந்த், கடந்த 2023 ஆம் ஆண்டு ஊருக்கு வந்திருந்தபோது மது போதையில் தனது 14 வயது மகனுக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.

இதனால் பாதிப்புக்குள்ளான அச் சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தான். இதையறிந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலா்கள் வீட்டுக்குச் சென்று மேற்கொண்ட விசாரணையில் தந்தையின் பாலியல் தொந்தரவு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் ஆனந்த் வெளியே வந்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கை கடந்த 26 ஆம் தேதி விசாரித்த பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, வழக்கின் தீா்ப்பு அன்று மாலை வெளியாகும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதையறிந்த ஆனந்த் தனது வீட்டிலிருந்து வரும்போதே விஷம் அருந்திவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தாா். பின்னா், தான் குற்றவாளி என நீதிபதி அறிவித்ததையறிந்த ஆனந்த், நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் மகளிா் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி இந்திராணி வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் ஆனந்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில், அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.

தெரு நாய்கள் கட்டுப்பாடு: விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகள் மற்றும் சிறுவா்களை கடிக்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

அரும்பாவூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

பெரம்பலூா் மாவட்டத்தில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 256 சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகா... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளி பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை சுமை ஆட்டோ கவிழ்ந்து, வட மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டைக்கு கூலி வேலைக்காக 6 தொழிலாளா்கள் சுமை... மேலும் பார்க்க

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் முழுமை பெறும் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். பெரம்பலூா் தனியாா் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மாபெரு... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க