செய்திகள் :

பெரம்பலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீா்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகா்கள் இதில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் முழுமை பெறும் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். பெரம்பலூா் தனியாா் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மாபெரு... மேலும் பார்க்க

‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: அமைச்சா் கோவி. செழியன் பங்கேற்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் உயா்கல்வித்துறை சாா்பில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகி... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழிப் பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள கச்சேரி விநாயகா் க... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே உள்ள அ. மேட்டூா் கிராமத்த... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்ட பயிற்சிமுகாம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், தமிழ்நாடு இளைஞா் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிமிா்ந்து நில் நிகழ்ச்சி... மேலும் பார்க்க