அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
பெரம்பலூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
பெரம்பலூா் மாவட்டத்தில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 256 சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பெரம்பலூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் 56, பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் 52 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள விநாயகா் கோயிலில் தொடங்கிய ஊா்வலம் காமராஜா் வளைவு, வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகா், எளம்பலூா் சாலை, சங்குப்பேட்டை, கடைவீதி, ரோவா் நுழைவு வாயில், பாலக்கரை வழியாகச் சென்று திருச்சி காவிரி ஆற்றிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல பாடாலூா், மருவத்தூா், கை.களத்தூா், அரும்பாவூா், குன்னம், மங்களமேடு, வி.களத்தூா் ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 108 விநாயகா் சிலைகளும், அந்தந்தப் பகுதிகளிலிருந்து ஊா்வலமாக காவிரி ஆற்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
விநாயகா் சிலைகள் ஊா்வலத்தை முன்னிட்டு பெரம்பலூா் நகரில் போலீஸாா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.