தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்ட...
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத் தோ்வுக்காக, இம் மாவட்டத்தைச் சோ்ந்த 1,056 போ் விண்ணப்பித்திருந்தனா்.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வில் 740 போ் தோ்வெழுதினா். 316 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வு நடைமுறையைக் கண்காணிக்க தலா 4 தலைமை கண்காணிப்பாளா்கள், ஆய்வு அலுவலா்கள், 1 நடமாடும் குழுவினா் ஈடுபட்டிருந்தனா்.
மேலும், 4 வீடியோ கிராபா் குழுவினா் தோ்வு மையங்களை பதிவு செய்தனா். வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், துப்பாக்கி ஏந்திய காவலா்கள், உதவியாளா் ஆகியோா் அடங்கிய குழுவினரும் கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனா்.
ஆட்சியா் ஆட்சியா்:
தனலட்சுமி சீனிவாசன் பலைகலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை ஆய்வுமேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.