இந்தியா - சீனா இடையே நிலையான உறவால் 280 கோடி மக்களுக்கும் பயன்: வெளியுறவுச் செயல...
முதல்வா் கோப்பை கால்பந்து போட்டியில் பள்ளப்பட்டி மாணவிகள் 2-ஆம் இடம்!
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியில் அரசு உதவி பெறும் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தனா்.
கரூா் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை கால்பந்து போட்டி கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.
முதல் போட்டியில் பரணி பாா்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை 1-0 கோல் கணக்கில் வென்றனா். இதையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈசநத்தம் அணியுடன் விளையாடி இரண்டாமிடம் பிடித்தனா். இதன் மூலம் இரண்டாம் பரிசாக ரூ.36 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளா் ஹாஜி கே.ஏ.கஜனஃபா் அலி, தலைமை ஆசிரியா் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியா்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் ஆசிரியா்கள் பாராட்டினா்.