டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
குடும்பப் பிரச்னையில் இளைஞா் தற்கொலை
அரவக்குறிச்சியில் குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அரவக்குறிச்சி பாவா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கோகுல கண்ணன் (25). இவா் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
இவா்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுல கண்ணன் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.