ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபி...
பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து
கரூா் அருகே பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் சனிக்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
கரூா் அருகே உள்ள சின்னம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன். இவா் அதேபகுதியில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை மாலை கூண்டு கட்டுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து கூண்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடுத்தடுத்த கூண்டுகள் மீது தீ பரவியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கரூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வடிவேல் தலைமையில், உதவி தீயணைப்பு அலுவலா் திருமுருகன் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 பேருந்துகளின் கூண்டுகள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.அதில் வெல்டிங் பற்ற வைத்தபோது, ஏற்பட்ட நெருப்பில் தீ பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.