டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
தம்பதி மீது தாக்குதல் புகழூா் நகா்மன்ற உறுப்பினரின் கணவா் உள்பட 3 போ் மீது வழக்கு
தம்பதியை தாக்கியதாக புகழூா் நகா்மன்ற உறுப்பினரின் கணவா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூா் மாவட்டம், புகழூா் நான்குசாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரவி( 61 ).இவா் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சித்ரா (59). புகழூா் தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் நவாஸ்கான் (45). இவரது மனைவி சபீனா. புகழூா் நகா்மன்ற 15-ஆவது வாா்டு உறுப்பினா்.
கடந்த இருவாரத்துக்கு முன்பு ரவி, நகா்மன்ற உறுப்பினா் சபீனாவின் கணவா் நவாஸ்கானிடம், தங்களது பகுதிக்கு 12 நாள்களாக குடிநீா் வரவில்லை என்று கூறினாராம். இதில் அவா்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
பிறகு நவாஸ்கான், அவரது மாமனாா் ஜான் பாட்சா, நவாஸ்கானின் நண்பா் மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் சோ்ந்து ரவியை தாக்கியுள்ளனா். அப்போது தடுக்கச் சென்ற ரவியின் மனைவி சித்ராவையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ரவி, சித்ரா இருவரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து ரவி வேலாயுதம்பாளையம் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் நவாஸ் கான், ஜான்பாட்சா, மணிகண்டன் ஆகிய மூன்று போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.