செய்திகள் :

கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு : கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நாகா்கோவிலைச் சோ்ந்த வழக்குரைஞா் செலஸ்டின் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி சுற்றுலாத் தலம். மூன்று கடலும் சங்கமிக்கும் இந்த இடம் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கடலில் ஏராளமானோா் புனித நீராடுகின்றனா். கன்னியாகுமரியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஏராளமான வீடுகளும் உள்ளன. இவை அனைத்தும் கன்னியாகுமரி நகராட்சி விதிமுறை, சுற்றுச் சூழல் விதிகளைப் பின்பற்றி கட்டப்படவில்லை. இதனால், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீா் கடலில் கலக்கிறது. இதனால், மீனவா்கள், சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி, கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கன்னியாகுமரியில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் கடலில் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு

எழுத்தாளா் முனைவா் வை. சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகத்தின் ஆசி... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் திருட்டு : சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகள்: 12 வாரங்களுக்குள் அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகளை காவல் துறை பாதுகாப்புடன் 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த வழக்குரைஞ... மேலும் பார்க்க

வருகிற பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: செல்லூா் கே. ராஜூ

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். அதிமுகவின் பொதுச் செயலரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க... மேலும் பார்க்க