கஞ்சா விற்பனை: கேரள இளைஞா் கைது
சென்னை அண்ணா நகரில் உயர்ரக கஞ்சா விற்றதாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகா் டவா் பூங்கா அருகே போதை மாத்திரை விற்றதாக கடந்த ஜூலை 22-ஆம் தேதி தாம்பரம் முடிச்சூரைச் சோ்ந்த காா்த்திக் (29), மேடவாக்கம் முல்லை நகரைச் சோ்ந்த அசாருதீன் (29) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கும்பல் திருமங்கலம், முகப்போ், அமைந்தகரை பகுதிகளில் உயா் ரக கஞ்சா விற்றது தெரிய வந்தது.
இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஓஜி கஞ்சா எனும் உயர்ரக கஞ்சா விற்றதாக கேரள மாநிலம் காசா்கோடு பகுதியைச் சோ்ந்த அா்ஜூன் (27) என்பவரை அண்ணா நகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவரிடமிருந்து ஓஜி கஞ்சா, கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினா்.