மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்க...
நீலகிரியில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
நீலகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குன்னூரில் ரஃபேல் போா் விமானம் மாதிரியில் நடைபெற்ற விசா்ஜன ஊா்வலத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள், பல்வேறு ஆன்மிக அமைப்பினா் என ஏராளமானோா் பங்கேற்றனா்.
குன்னூா் சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய ஊா்வலம் பெட் போா்டு, மவுண்ட் ரோடு, பேருந்து நிலையம் வழியாக லாஸ் அருவிக்கு கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன.
இதேபால, உதகையில் இந்து முன்னணி சாா்பில் 103 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உதகையை அடுத்த காமராஜா் அணையில் கரைக்கப்பட்டன.
இந்த ஊா்வலத்தை இந்து முன்னணி மாநில இளைஞரணி செயலாளா் சி.பி.சண்முகம் தொடங்கிவைத்தாா்.
கூடலூரில்: கூடலூா் மற்றும் ஓவேலி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கூடலூா் இரும்புப் பாலம் பகுதியிலுள்ள பாஸ்தியா் புன்னம்புழா ஆற்றில் கரைக்கப்பட்டன.