அழுகிய நிலையில் யானை சடலம்: வனத் துறை விசாரணை!
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே கிளன்மாா்கன் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த யானையின் சடலத்தைக் கைப்பற்றி வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே கிளன்மாா்கன் டவா் லயன் பகுதியில் வனப் பணியளா்கள் வெள்ளிக்கிழமை மாலை ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் யானை இறந்து கிடப்பது
தெரியவந்தது. இரவாகி விட்டதால் யானையின் உடல் சனிக்கிழமை கூறாய்வு செய்யப்பட்டது. உயிரிழந்தது சுமாா் 50 வயதுடைய பெண் யானை என்றும், உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.